Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உலகநாயகன் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்

உலகநாயகன் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்

By: vaithegi Tue, 07 Nov 2023 09:30:38 AM

உலகநாயகன் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்று உள்ளார்,

இதையடுத்து நடிகராக மட்டும் அல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.

chief minister stalin,world hero kamal haasan ,முதல்வர் ஸ்டாலின் ,உலகநாயகன் கமல்ஹாசன்


மேலும் இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி - @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு! என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :