Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Fri, 25 Aug 2023 09:42:20 AM

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 71 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனை அடுத்து விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

தேமுதிக தொண்டர்களால் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்தின் பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இச்சூழலில் கட்சி தொண்டர்களையும் ,நிர்வாகிகளையும் விஜயகாந்த் இன்று காலை 10 மணிக்கு தேமுதிக தலைமை கழகத்தில் சந்திக்கிறார்.

birthday of chief minister stalin,vijayakanth ,முதல்வர் ஸ்டாலின்,விஜயகாந்த் , பிறந்த நாள்

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாதாவது , தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :