Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அந்தரத்தில் நின்றபடி அசராமல் பாடிய சின்னகுயில் சித்ரா... ரசிகர்கள் உற்சாகம்

அந்தரத்தில் நின்றபடி அசராமல் பாடிய சின்னகுயில் சித்ரா... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sat, 18 Feb 2023 9:04:24 PM

அந்தரத்தில் நின்றபடி அசராமல் பாடிய சின்னகுயில் சித்ரா... ரசிகர்கள் உற்சாகம்

கேரளா: இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சின்னக்குயில் சித்ராவை வைத்து மேஜிக் செய்யப்பட்டபோது கொஞ்சம் கூட அசராமல் அந்தரத்தில் நின்றபடி பாடல் பாடி அசத்திவிட்டார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு குரல். சின்னகுயில் சித்ரா எப்படிபட்ட பாடல்களை கொடுத்தாலும் அதை அழகாக பாடி ரசிகர்களை மீண்டும் மீண்டும் ரசிக்க வைப்பார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை பாடி அனைவரையும் அசத்தி இருந்தார். சித்ரா பாடல்கள் பாடுவதை தாண்டி நிறைய இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

asatal chitra,song,antaram,magic,asatanar ,அசத்தல் சித்ரா, பாடல், அந்தரம், மேஜிக்,  அசத்தினார்

அப்படி மலையாளத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சித்ரா. அப்போது அவரை வைத்து ஒருவர் மேஜிக் செய்கிறார். சித்ராவும் அந்தரத்தில் தொங்கியபடி பாடல் பாடுகிறார், அதைப்பார்த்ததும் அனைவரும் அசந்துபோய்விட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அனைவரும் அசத்தல் சித்ரா என்று வியந்து பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|