Advertisement

வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது - கவிஞர் வைரமுத்து டுவிட்

By: Monisha Thu, 17 Dec 2020 08:28:32 AM

வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது - கவிஞர் வைரமுத்து டுவிட்

கொரோனாவுக்கு சரியான மருந்து கண்டறியும்வரை பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் திறக்காமலிருப்பதே உகந்தது என்று வைரமுத்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில், 150-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு சரியான மருந்து கண்டறியும்வரை வகுப்பறைகள் திறக்காமலிருப்பதே உகந்தது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

corona virus,diamond,school,college,classrooms ,கொரோனா வைரஸ்,வைரமுத்து,பள்ளி, கல்லூரி,வகுப்பறைகள்

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கல்வி நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன். சரியான மருந்து கண்டறியப்படும்வரை அல்லது கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது. இது உரியவர்களின் உரிய நடவடிக்கைக்காக எனக் கூறியுள்ளார்.

Tags :
|