Advertisement

வெளிநாட்டில் லியோ படத்தின் வசூல்

By: vaithegi Thu, 09 Nov 2023 11:32:28 AM

வெளிநாட்டில் லியோ படத்தின் வசூல்


விஜய்யின் லியோ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 201 கோடி வசூல் ....இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லியோ.

இந்த திரைப்படத்தினை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். வெளியான நாளிலிருந்து தற்போது வரை இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இதையடுத்து படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு போலவே படத்தின் வசூலும் குவிந்து கொண்டு வருகிறது.

leo,collection ,லியோ ,வசூல்

அதிலும் குறிப்பாக இதுவரை படம் உலகம் முழுவதும் 602 கோடிகள் வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், படத்திற்கு இருக்கும் எதிர்பார்க்க வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைகளை படைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் படத்தின் வசூல் அப்படியே குறைந்த காரணத்தினால் இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி வசூல் மட்டுமே செய்துள்ளது.

இந்த நிலையில், திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 201 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. வெளிநாடுகளில் தமிழ் படம் 200 கோடி வசூல் செய்தது என்றால் அது சாதாரண விஷயமே இல்லை.

ஆனால், விஜயின் லியோ படம் வெளியான 1 மாதத்திற்குள்ளே 200 கோடிகளுக்கு மேல் வெளிநாடுகளில் மட்டும் வசூல் செய்து உள்ளதால் கோலிவுட் திரையுலகமே விஜயின் மார்க்கெட்டை பார்த்து மிரண்டுள்ளது.

Tags :
|