Advertisement

சிம்புவே வந்து அடிப்பாரு... கூல் சுரேசை கமெண்ட் அடித்த விஷ்ணு

By: Nagaraj Tue, 03 Oct 2023 6:41:31 PM

சிம்புவே வந்து அடிப்பாரு... கூல் சுரேசை கமெண்ட் அடித்த விஷ்ணு

சென்னை: பிக்பாஸ் வீட்டில் எனக்கு தெரிந்தது மூணு விஷயம் தான்.. எஸ்.டி. ஆர் என்று கூல் சுரேஷ் கூற இப்படியே பேசிட்டு இருங்க, சிம்புவே வந்து உங்களை வீட்டில் கல்லால் அடிக்க போகிறார் என விஷ்ணு கமெண்ட் அடித்துள்ளார்.

பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது ஆரம்பத்திலேயே பரபரப்பாக மாறி இருக்கிறது. இரண்டாவது வீட்டுக்கு 6 போட்டியாளர்களை அனுப்பிவிட்டு, அவர்கள் எந்த டாஸ்க்கிலும் கலந்துகொள்ள கூடாது என கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் முதல் நாளே நாமிநேஷனும் நடந்து முடிந்திருக்கிறது. அதில் வனிதா மகள் ஜோவிகா, பிரதீப், யுகேந்திரன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

vishnu,cool suresh,actor simbu,bigg boss 7,kallal,review ,விஷ்ணு, கூல் சுரேஷ், நடிகர் சிம்பு, பிக்பாஸ் 7, கல்லால், விமர்சனம்

நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே தான் இந்த ஷோவுக்கு வர காரணமே சிம்பு மற்றும் சந்தானம் ஆகியோர் தான் என கூறி இருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் மற்ற போட்டியாளர்களிடம் பேசும்போது தனக்கு எதுவும் தெரியாது என கூறி வருகிறார்.

"எதுமே தெரியாது தெரியாதுனு சொன்னா. உங்களுக்கு என்ன தான் தெரியும்?" என மற்றொரு போட்டியாளர் விஷ்ணு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அவர் "எனக்கு தெரிந்தது மூணு விஷயம் தான்.. எஸ்.. டி.. ஆர்" என கூறுகிறார்.

இப்படியே பேசிட்டு இருங்க, சிம்புவே வந்து உங்களை வீட்டில் கல்லால் அடிக்க போகிறார் என விஷ்ணு கூல் சுரேஷை விமர்சித்து இருக்கிறார்.

Tags :
|
|