Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நான்காவது முறையாக மற்றொரு ஆம்புலன்சை வாங்கி கொடுத்த காமெடி நடிகர் பாலா

நான்காவது முறையாக மற்றொரு ஆம்புலன்சை வாங்கி கொடுத்த காமெடி நடிகர் பாலா

By: Nagaraj Mon, 16 Oct 2023 07:16:29 AM

நான்காவது முறையாக மற்றொரு ஆம்புலன்சை வாங்கி கொடுத்த காமெடி நடிகர் பாலா

சென்னை: மீண்டும் ஒரு ஆம்புலன்சை வாங்கி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா.

இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு புகழ் உச்சிக்கு சென்றுவிட்டார். தற்போது பாலா திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

actor bala,ambulance,delivery,fourth time,compassion ,நடிகர் பாலா, ஆம்புலன்ஸ், வழங்கல், நான்காவது முறை, இரக்கம்

இந்நிலையில் புதிய ஆம்புலன்ஸை வழங்கிவிட்டு காமெடி நடிகர் பாலா அளித்த பேட்டியில், என்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாது தருணம் இது. இதுவரை 3 ஆம்புலன்ஸை கொடுத்துள்ளேன். தற்போது நான்காவது ஆம்புலன்ஸை கொடுத்து இருக்கிறேன்.

திருப்பூர், கோவை போன்ற இடங்களில் ஆதரவற்றோரை மீட்க இந்த ஆம்புலன்ஸை கொடுத்து நான் உதவி இருக்கிறேன். நான் என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன் என்று பாலா கூறியுள்ளார்.

Tags :