Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • எனக்கும் அந்த படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; காமெடி நடிகர் யோகிபாபு

எனக்கும் அந்த படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; காமெடி நடிகர் யோகிபாபு

By: Monisha Thu, 13 Aug 2020 11:10:22 AM

எனக்கும் அந்த படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; காமெடி நடிகர் யோகிபாபு

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யோகி பாபு மார்க்கெட் உச்சத்தில் இருப்பதை கணக்கில் கொண்டு அவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

yogibabu,comedy actor,advertising,photography,release ,யோகிபாபு,காமெடி நடிகர்,விளம்பரம்,புகைப்படம்,ரிலீஸ்

இந்த நிலையில் யோகி பாபு நடிக்காத ஒரு படத்தில் அவருடைய புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்துள்ளதை யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார். 'தெளலத்' என்ற படம் விரைவில் வெளிவர இருப்பதாக யோகிபாபுவின் புகைப்படத்துடன் இன்று விளம்பரம் வெளிவந்துள்ளது.

இது குறித்து கருத்து கூறிய யோகி பாபு "இன்று இந்த படத்தின் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் 'தெளலத்' படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags :