Advertisement

தங்கலானுடன் போட்டி போடுகிறதா விடுதலை-2 படம்

By: Nagaraj Sat, 04 Nov 2023 4:16:04 PM

தங்கலானுடன் போட்டி போடுகிறதா விடுதலை-2 படம்

சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ரிலீஸாகும் அதே நாளில்தான் விடுதலை-2 படமும் ரிலீஸ் ஆகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.

இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது.

thangalan,vimthithi-2,vikram,film release,vijay sethupathi ,தங்கலான், விடுதலை-2, விக்ரம், படம் ரிலீஸ், விஜய் சேதுபதி

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில்தான் விக்ரம் நடிப்பில் உருவாகும் தங்கலான் திரைப்படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|