Advertisement

நடிகர் யோகிபாபு மீது புகார்

By: vaithegi Mon, 21 Aug 2023 10:27:50 AM

நடிகர் யோகிபாபு மீது புகார்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர்ஹாஷீர் (48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்தி கொண்டு வருகிறார்.

இவர். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: -நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன்.

complaint,actor yogi babu ,புகார், நடிகர் யோகிபாபு

இதையடுத்து இந்த படத்தில் நடிக்கசம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, முன் பணமாக ரூ.20 லட்சம் யோகிபாபு பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகிபாபுவை அழைத்தபோது, அவர் வரவில்லை.

படப்பிடிப்புக்கு வராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி கொண்டு வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இதனை தூது புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து கொண்டு வருகின்றனர்.

Tags :