Advertisement

20 வருடங்கள் நிறைவு... நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு

By: Nagaraj Fri, 23 June 2023 8:36:28 PM

20 வருடங்கள் நிறைவு... நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு

சென்னை: நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் இருபது வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதற்காக ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் முதல் படமான ஜெயம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் தொடர்ந்து நடித்து வந்த வெற்றியின் மூலம் பெரிய நட்சத்திரமாகிவிட்டார்.

தனி ஒருவன் மற்றொரு முக்கிய படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்கள் கைவசம் உள்ளன.

20 years,cinema,completion,jayamravi,resilience,twitter, ,சினிமா, ஜெயம்ரவி, டுவிட்டர், 20 ஆண்டுகள், நிறைவு, நெகிழ்ச்சி

சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ஜெயம்ரவி டுவிட்டரில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல் கல்லை அடைந்து இருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என்மீது அன்பு வைத்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயம் படத்தில் இருந்து பொன்னியின் செல்வன் படம் வரை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் அளித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கும் எனது 20 ஆண்டுகால பயணத்தில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

Tags :
|