Advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்

By: Nagaraj Mon, 28 Dec 2020 8:42:12 PM

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்

உடல் நலக்குறைவால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார்.

இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளில் மிகவும் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்தவர்.

இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மான் சிறுவயது இருக்கும்போதே தந்தை இறந்துவிட, அவரது தாயார் கரீமா பேகம் தான் அவரை வளர்த்து வந்தார். ரஹ்மான் தனது அம்மா மிகவும் துணிச்சலானவர் என்று பல முறை கூறியுள்ளார்.

a.r. rahman,mother,deceased,ill,mourning ,ஏ.ஆர். ரஹ்மான், அம்மா, காலமானார், உடல் நலக்குறைவு, இரங்கல்

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில், இசைத்துறையின் ஜாம்பவான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்." எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|