Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் சுரேசை மொட்டை என்று ஒருமையில் அழைக்கும் அர்ச்சனாவுக்கு எழுந்த கண்டனம்

நடிகர் சுரேசை மொட்டை என்று ஒருமையில் அழைக்கும் அர்ச்சனாவுக்கு எழுந்த கண்டனம்

By: Nagaraj Mon, 19 Oct 2020 09:18:38 AM

நடிகர் சுரேசை மொட்டை என்று ஒருமையில் அழைக்கும் அர்ச்சனாவுக்கு எழுந்த கண்டனம்

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தியை மற்றொரு போட்டியாளராக அர்ச்சனா ஒருமையில் மொட்டை என்று அழைப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்கள் ஆகியுள்ளது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, சக போட்டியாளர் அனிதா சம்பத், ரியோ ராஜ் ஆகியோர் அவருடன் கடுமையாக முரண்பட்டு வருகின்றனர். முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி - அனிதா சம்பத் சண்டைதான் சமூக ஊடகங்களில் ட்ரோல் ஆனது. பலரும் அவரை டார்கெட் செய்வதால் அவருக்கு ஒரு அனுதாப ஆதரவு அலை பார்வையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொட்டை அடித்துக்கொண்டு போட்டியாளராக உள்ளே சென்றுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி முதலிலேயே கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று கணிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு சமையல் கலைஞர். ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

actor suresh,bald,archana,harsh condemnation,interesting ,நடிகர் சுரேஷ், மொட்டை, அர்ச்சனை, கடும் கண்டனம், சுவாரசியம்

அதோடு, அவர் சக்ஸ் கிட்சன் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். ஆனால், அவருடைய வயது, அவர் யார் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் அனிதா சம்பத், ரியோ ராஜ், சனம் ஷெட்டி என அனைவரும் அவருடன் மல்லுக்கட்டுகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளராக சென்றுள்ள அர்ச்சனா, 2வது நாளிலேயே அவர் ஓவர் ஆக்டிங் என்று பெயர் எடுத்துவிட்டார்.

அர்ச்சனா பலமுறை சுரேஷ் சக்ரவர்த்தியை மொட்டை, மொட்டை என்றும் ஒருமையிலும் பேசி வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகை சுஜா வருணியின் கணவருமான சிவகுமார், பிக் பாஸ் வீட்டில், நடிகை அர்ச்சனா, சுரேஷ் சக்ரவரத்தியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதைக் கண்டித்து விமர்சனம் செய்துள்ளார்.

அதோடு, சுரேஷ் யார் தெரியுமா என்றும் அவர் மம்முட்டியின் அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதையும் அவரைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களையும் கூறியுள்ளார்.

Tags :
|