Advertisement

ரஜினிகாந்த் வாழ்த்து... நயன்தாரா 75 படத்தின் படக்குழுவினர் உற்சாகம்

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:19:50 PM

ரஜினிகாந்த் வாழ்த்து... நயன்தாரா 75 படத்தின் படக்குழுவினர் உற்சாகம்

சென்னை: நயன்தாரா 75 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

திருமணத்துக்குப் பிறகு வெளியான நயன்தாராவின் கனெக்ட் படம் படு தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா 75 என்ற அறிவிப்புடன் ஒரு படம் அறிவிக்கப்பட்டது.ஆனால் அடுத்த கட்ட வேலைகள் தாமதமானது.

movie,nayanthara,shooting, ,சூப்பர் ஸ்டார், நயன்தாரா, படப்பிடிப்பு

இந்நிலையில் படத்தின் பூஜையுடன் தற்போது வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டினின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் படக்குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags :
|