Advertisement

45-வது பிறந்த நாளை கொண்டாடிய சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது!

By: Monisha Fri, 24 July 2020 10:36:51 AM

45-வது பிறந்த நாளை கொண்டாடிய சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது!

நடிகர் சூர்யா 1997-ல் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அவர் நடித்த நந்தா, மவுனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி, ஆறு, அயன், ஆதவன், 7-ம் அறிவு, சிங்கம், காப்பான் ஆகிய படங்களில்அவரது நடிப்பு திறமையை பெரிதும் பாராட்டப்பட்டது. படத்தின் கதாபாத்திரமாக மாற சூர்யா தன்னை வருத்திக்கொள்வார் என்ற பாராட்டும் அவருக்கு உண்டு.

இந்நிலையில் சூர்யா நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளத்தில் நடிகர்கள் மோகன்லால், ராணா, ஆர்யா, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி, விஜய் ஆண்டனி, சூரி, சிபி சத்யராஜ், துல்கர் சல்மான், அருண் விஜய், நடிகைகள் ரகுல்பிரீத் சிங், ராஷ்மிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதா, இயக்குனர்கள் கே.வி. ஆனந்த், லிங்குசாமி, பாண்டிராஜ், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்ட திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

actor surya,birthday,greetings,actors,actresses ,நடிகர் சூர்யா,பிறந்த நாள்,வாழ்த்துக்கள்,நடிகர்கள்,நடிகைகள்

மேலும், ட்விட்டரில் அவரது பிறந்த நாள் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. அதோடு கூட ரசிகர்களும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

சூர்யா பிறந்த நாளையொட்டி அவர் நடித்துள்ள சூரரை போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடலின் ஒரு நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்துக்கு பிறகு சூர்யா ஹரி இயக்கும் அருவா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்கிறார். வாடி வாசல் படத்தில் அவரது முதல் தோற்றத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு நேற்று வெளியிட்டார்.

Tags :
|