Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 1200 எபிசோட்கள் நிறைவு செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

1200 எபிசோட்கள் நிறைவு செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

By: Nagaraj Fri, 12 May 2023 7:46:28 PM

1200 எபிசோட்கள் நிறைவு செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

சென்னை: 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். டிஆர்பி தரவரிசையில் தொடர்ந்து இடம் பெற்று வரும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் எப்போதும் தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து தொடர்களில் ஒன்றாகும். இதனை படக்குழுவினர் படப்பிடிப்பில் வெகுவாக கொண்டாடினர்.

pandian stores,perfection,journey,appreciation,new milestone ,பாண்டியன் ஸ்டோர்ஸ், முழுமை, பயணம், பாராட்டுக்கள், புதிய மைல்கல்

இந்த மகிழ்ச்சியை கேக் வெட்டி பகிர்ந்து கொண்டனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சீரியலின் புதிய மைல்கல்லைப் பற்றிப் பேசிய இயக்குநர் சிவசேகர், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புதிய மைல்கல்லை எட்டடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்தத் தொடரின் முழுமையான ‘பயணம்’ என் கேரியருக்கு உயிர் கொடுத்தது” என்றார்.

Tags :