Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • துணிவு படம் குறித்து தொடர்ந்து வரும் அப்டேட்டுகள்... ரசிகர்கள் கொண்டாட்டம்

துணிவு படம் குறித்து தொடர்ந்து வரும் அப்டேட்டுகள்... ரசிகர்கள் கொண்டாட்டம்

By: Nagaraj Sat, 31 Dec 2022 11:34:00 AM

துணிவு படம் குறித்து தொடர்ந்து வரும் அப்டேட்டுகள்... ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: துணிவு படம் குறித்து தொடர்ந்து வரும் அப்டேட்டுகளால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர். பொங்கல் தல பொங்கல்யா என்று தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது. வரும் பொங்கலுக்கு ‘துணிவு’ படம் வெளியாகவுள்ளது.

ajith,mohana sundaram,thunivu, ,அஜித், துணிவு, மோகன சுந்தரம், நடித்துள்ளனர், அப்டேட், போஸ்டர்கள்

சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்க்ஸ்டா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, ‘துணிவு’ படத்தில் பிரேமாக நடிகர் பிரேமும், மைபாவாக பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரமும் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், போஸ்டர்களை வெளியிட்ட படக்குழுவினர், ராஜேஷ், க்ரிஷ் வேடங்களில் நடிகர் பக்ஸ் மற்றும் ஜான் கொக்கன் நடித்துள்ளனர். தொடர்ந்து வரும் அப்டேட்களால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags :
|