Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன் குறித்து எழும் சர்ச்சைகள் தேவையற்றது... இயக்குனர் மணிரத்னம் பதில்

பொன்னியின் செல்வன் குறித்து எழும் சர்ச்சைகள் தேவையற்றது... இயக்குனர் மணிரத்னம் பதில்

By: Nagaraj Wed, 19 Apr 2023 7:39:19 PM

பொன்னியின் செல்வன் குறித்து எழும் சர்ச்சைகள் தேவையற்றது... இயக்குனர் மணிரத்னம் பதில்

சென்னை: பொன்னியின் செல்வன் குறித்து எழும் சர்ச்சைகள் தேவையற்றவை என்று இயக்குனர் மணிரத்னம் பதிலளித்துள்ளார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் 2 பாகங்களாக இயக்கியவர் மணிரத்னம். இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினி மற்றும் மந்தாகினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டையாவாக சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

controversy,description,director,mani ratnam,ponniyin selvan, ,இயக்குநர், சர்ச்சை, பொன்னியின் செல்வன், மணிரத்னம், விளக்கம்

முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களே இருப்பதால் படத்தை பிரபலப்படுத்தும் முனைப்பில் படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

கோயம்புத்தூரில் நடந்த நிகழ்வில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து பேசினர். சென்னையில் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராஜராஜ சோழனை இந்து மன்னராக காட்டியதாக எழுந்த சர்ச்சை குறித்து இயக்குநர் மணிரத்னத்திடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணிரத்னம், “பொன்னியின் செல்வன் படத்தில் மதத்தை ஏன் அறிமுகப்படுத்துகிறீர்கள்? கல்கியின் திரைக்கதையில் உருவான படம் இது.

ராஜராஜ சோழனின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். பொன்னியின் செல்வன் குறித்து தேவையில்லாத சர்ச்சைகள் தேவையற்றவை’ என பதிலளித்துள்ளார்.

Tags :