Advertisement

பாடலுக்கு எழுந்த சர்ச்சை... விஜய் படக்குழு எடுத்த நடவடிக்கை

By: Nagaraj Wed, 28 June 2023 9:29:52 PM

பாடலுக்கு எழுந்த சர்ச்சை... விஜய் படக்குழு எடுத்த நடவடிக்கை

சென்னை: சர்ச்சையை அடுத்து நான் ரெடி பாடலில் சிறு மாற்றம் செய்துள்ளது லியோ படக்குழு. ‘நான் ரெடி’ பாடலில் ‘லியோ’ படக்குழு சற்று மாற்றம் செய்துள்ளது. யூடியூபில் இருக்கும் இப்பாடலில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Tags :
|