Advertisement

குக் வித் கோமாளி 4 ல் இந்தவாரம் இயக்குனர் கிஷோர் வெளியேற்றம்?

By: Nagaraj Fri, 10 Feb 2023 04:57:33 AM

குக் வித் கோமாளி 4 ல் இந்தவாரம் இயக்குனர் கிஷோர் வெளியேற்றம்?

சென்னை: குக் வித் கோமாளி 4 ல் இந்தவாரம் இயக்குனர் கிஷோர் வெளியேறலாம் என்று தெரிய வந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஸ்ருஷ்டி டாங்கே, காலயன், ஷெரின், விசித்திரா, ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

kalayan,sherin,cook with komali,welcome,will leave ,காலயன், ஷெரின், குக் வித் கோமாளி, வரவேற்பு, வெளியேறுவார்

இரு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்று வந்துள்ளது. நிகழ்ச்சி துவங்கி மூன்றாவது வாரத்திலேயே எலிமினேஷன் வந்துள்ளதால் ரசிகர்கள் சற்று அப்செட்டில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் ஷெரின், காலயன் மற்றும் கிஷோர் இவர்கள் மூவரில் ஒருவர் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறார்கள்.

இதில் காலயன் மற்றும் ஷெரின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள போட்டியாளர்களாக இருக்கும் பட்சத்தில் இயக்குனர் கிஷோர் தான் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

Tags :
|