Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லாக்டவுன் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ்; டிரெய்லர் வெளியிட்ட ராம்கோபால் வர்மா

லாக்டவுன் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ்; டிரெய்லர் வெளியிட்ட ராம்கோபால் வர்மா

By: Nagaraj Wed, 27 May 2020 4:51:05 PM

லாக்டவுன் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ்; டிரெய்லர் வெளியிட்ட ராம்கோபால் வர்மா

லாக்டவுன் காலகட்டத்திலும் கொரோனா வைரஸ் என்ற டைட்டிலில் ஒரு படத்தைத் தயாரித்து அதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுக்க ஐம்பத்தைந்து லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருபத்திரெண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ramkopalvarma,corona,curfew,music ,ராம்கோபால்வர்மா, கொரோனா, ஊரடங்கு காலம், இசை

அதேவேளையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. லாக்டவுன் காலகட்டத்திலும் கொரோனா வைரஸ் என்ற டைட்டிலில் ஒரு படத்தைத் தயாரித்து அதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

அகஸ்த்யா மஞ்சு இயக்கத்தில் ஸ்ரீகாந்த் அய்யங்கார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டிஎஸ்ஆர் இசையமைத்துள்ளார். படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் ராம்கோபால் வர்மா, ஊரடங்கு காலத்தில் கதை நடக்கிறது. ஊரடங்கு காலத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், கடவுள் யாராக இருந்தாலும் எங்கள் வேலையை தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபிக்க விரும்பினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|