Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா; டுவிட்டரில் அவரும் உறுதிப்படுத்தினார்

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா; டுவிட்டரில் அவரும் உறுதிப்படுத்தினார்

By: Nagaraj Fri, 14 Aug 2020 4:05:05 PM

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா; டுவிட்டரில் அவரும் உறுதிப்படுத்தினார்

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஒவ்வொரு நாளும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. தினமும் இந்த வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பாலிவுட் தொடங்கி சில திரையுலக பிரபலங்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

nikki caulfield,corona,therapy,loneliness,twitter ,நிக்கி கல்ராணி, கொரோனா, சிகிச்சை, தனிமை, டுவிட்டர்

இந்நிலையில் டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்திருக்கும் நிக்கி கல்ராணி, “எனக்கு கொரோனா தொற்று இருப்பதை தெரிந்து கொண்டேன்.
அதன் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது உடல் நலம் தேறி வருகிறேன். எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

Tags :
|