Advertisement

'துணிவு'. படத்தின் டிரைலர் 2கோடி பார்வையாளர்களை கடந்தது

By: vaithegi Sun, 01 Jan 2023 6:44:01 PM

'துணிவு'. படத்தின் டிரைலர் 2கோடி பார்வையாளர்களை கடந்தது

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனை அடுத்து போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

thavavu,trailer ,துணிவு,டிரைலர்

சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் 2கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் முதலிடைத்தை பிடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :