Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹாலிவுட் இயக்குனருக்கு கோர்ட் அபராதம்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹாலிவுட் இயக்குனருக்கு கோர்ட் அபராதம்

By: Nagaraj Sun, 13 Nov 2022 3:35:40 PM

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹாலிவுட் இயக்குனருக்கு கோர்ட் அபராதம்

நியூயார்க்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிரபல ஹாலிவுட் இயக்குனர் பால் ஹாகிஸ்க்கு நியூயார்க் நகர கோர்ட் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

ஆஸ்கார் விருதை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் பால் ஹாகிஸ் (வயது 69). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்தன.

court-orders,crore compensation,director ,இயக்குனர், இழப்பீடு, உத்தரவு, பால் ஹக்ஸ்

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பால் ஹாகிஸ் அவரது வீட்டில் வைத்து தன்னை கற்பழித்ததாக ஹாலே பிரெஸ்ட் என்கிற பெண் கடந்த 2017-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் நியூயார்க் நகர கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பால் ஹாகிஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார்.

தொடர்ந்து, ஹாலே பிரெஸ்ட்டை கற்பழித்த குற்றத்துக்காக அவருக்கு பால் ஹாகிஸ் 7.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.60 கோடி) இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.

Tags :