Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

By: Nagaraj Fri, 21 July 2023 11:20:00 PM

கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

மும்பை: கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். ரோர் ஆஃப் தி லயன் என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் வுமன்ஸ் டே அவுட் என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க தோனியும், சாக்‌ஷியும் முடிவு செய்திருந்தனர் .

 ,படக்குழு, அதிகாரப்பூர்வம், எல்ஜிஎம், திரைப்படம், தோனி தயாரிப்பு

அதன்படி, ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், எல்ஜிஎம் திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Tags :