Advertisement

கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி அல்லு அர்ஜூனின் ரசிகையாம்

By: Nagaraj Tue, 25 July 2023 7:30:47 PM

கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி அல்லு அர்ஜூனின் ரசிகையாம்

ஹைதராபாத்: தோனியின் மனைவி சாக்ஷி தென்னிந்திய ஹீரோ அல்லு அர்ஜூனின் ரசிகை என்று தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் தோனி தற்போது LGM என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த படம் வரும் ஜூலை 28ம் தேதி திரைக்கு வருகிறது.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உட்பட பலரும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற போது தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

allu arjun,fan,cricketer dhoni,wife,film producer ,அல்லு அர்ஜூன், ரசிகை, கிரிக்கெட் வீரர் தோனி, மனைவி, படம் தயாரிப்பு

இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் LGM படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய தோனியின் மனைவி தான் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை என கூறி இருக்கிறார்.

அவர் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். ஓடிடி வரும் முன்பே youtubeல் அல்லு அர்ஜுனின் எல்லா படங்களையும் ஹிந்தி டப்பிங்கில் தான் பார்த்து இருக்கிறேன் என அவர் கூறி இருக்கிறார்.

Tags :
|
|