Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாட்டிறைச்சி வெட்டும் காட்சிக்காக நடிகை ஹனிரோஸ்க்கு எதிராக விமர்சனங்கள்

மாட்டிறைச்சி வெட்டும் காட்சிக்காக நடிகை ஹனிரோஸ்க்கு எதிராக விமர்சனங்கள்

By: Nagaraj Tue, 18 July 2023 9:10:23 PM

மாட்டிறைச்சி வெட்டும் காட்சிக்காக நடிகை ஹனிரோஸ்க்கு எதிராக விமர்சனங்கள்

சென்னை: நடிகை ஹனிரோஸ் மாட்டிறைச்சி வெட்டும் காட்சி பசுவுக்கு எதிராக போராடுபவர்களை புண்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன

தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ் கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹனிரோஸ் ‘ரேச்சல்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஹனிரோஸ் ரேச்சலில் மாட்டிறைச்சி வெட்டும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

acting,beef,cutter,honeyrose,resistance , எதிர்ப்பு, நடிப்பு, மாட்டிறைச்சி, வெட்டுபவர், ஹனிரோஸ்

படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஹனிரோஸ் மாட்டிறைச்சியை கத்தியால் வெட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் உள்ளன. பசு வதைக்கு எதிராக சில அமைப்புகள் போராடி வருகின்றன. பசு பாதுகாப்பு இயக்கங்களும் உள்ளன. இந்நிலையில் ஹனிரோஸ் மாட்டிறைச்சி வெட்டும் காட்சி பசுவுக்கு எதிராக போராடுபவர்களை புண்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கு கர்நாடக மாநில பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரேச்சல் படத்தின் கதை வித்தியாசமானது, கதையை கேட்டதும் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதி நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார் ஹனிரோஸ்.

Tags :
|
|
|