Advertisement

ஷாருக்கான் மீது க்ரஷ்... நடிகை பிரியாமணி சொல்கிறார்

By: Nagaraj Tue, 03 Oct 2023 6:42:26 PM

ஷாருக்கான் மீது க்ரஷ்... நடிகை பிரியாமணி சொல்கிறார்

சென்னை: தனக்கு ஷாருக்கான் மீது க்ரஷ் இருப்பதாகவும், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

actor,actress,interview,krush,priyamani, ,கிரஷ், நடிகர், நடிகை, பிரியாமணி, பேட்டி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த நிலையில் பிரியாமணி தனக்கு ஷாருக்கான் மீது க்ரஷ் இருப்பதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் உங்களுக்கு பாலிவுட் நடிகர்களை பிடிக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியாமணி, எனக்கு நிறைய பாலிவுட் நடிகர்களை பிடிக்கும். ஆனால் ஷாருக்கான் மீது கிரஷ் உள்ளது. எனக்கு அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|