Advertisement

தாய்லாந்து சென்று உடல் எடையை குறைத்த நடிகர் மோகன்லாலின் மகள்

By: Nagaraj Sat, 19 Dec 2020 9:30:33 PM

தாய்லாந்து சென்று உடல் எடையை குறைத்த நடிகர் மோகன்லாலின் மகள்

தாய்லாந்து சென்று உடல் எடையை குறைத்து திரும்பி உள்ளார் நடிகர் மோகன்லாலின் மகன்.

மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், தந்தையைப்போல நடிப்பு பாதையில் செல்ல விரும்பாமல், டைரக்சன் ஆசையில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். ஆனால், காலம் அவரை நடிகனாக்கி விட்டது. ஆனால் மோகன்லாலின் மகள் விஸ்மாயாவோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.

தந்தையுடன் ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்தார். மோகன்லால், அவரது மகன் பிரணவ் இருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் விஸ்மாயாவோ உடல் எடை பற்றி அவ்வளவாக, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.

vismaya,daughter of mohanlal,gym,body weight ,விஸ்மாயா, மோகன்லால் மகள், உடற்பயிற்சி நிறுவனம், உடல் எடை

இந்தநிலையில் தனது உடல் எடையை குறைப்பதற்காக தாய்லாந்தில் உள்ள ஒரு தீவிற்கு சென்று கடுமையான பயிற்சி எடுத்து ஸ்லிம் ஆகி கேரளாவுக்கு திரும்பி இருக்கிறார் விஸ்மாயா.

அங்கே பிட்கோ என்கிற உடற்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து விதவிதமான பயிற்சி மற்றும் உணவு முறை மூலமாக சுமார் 22 கிலோ எடையை குறைத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார். தாய்லாந்து செல்லும்போது தான் எப்படி இருந்தேன் என்பதையும் திரும்பி வந்தபோது எப்படி இருக்கிறேன் என்பதை காட்டும் விதமாக இரண்டு புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஸ்மாயா.

Tags :
|