Advertisement

ருசியான முறையில் மாங்காய் பச்சடி செய்முறை

By: Nagaraj Sun, 14 Aug 2022 8:11:33 PM

ருசியான முறையில் மாங்காய் பச்சடி செய்முறை

சென்னை: ருசியான முறையில் மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று தெரியுங்களா. தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

மாங்காய் - ஒன்று
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 5
கடுகு - 3/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

mango,jaggery,cardamom powder,green chillies,mustard ,மாங்காய், வெல்லம், ஏலக்காய் பொடி, பச்சைமிளகாய், கடுகு

செய்முறை: பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை கேரட் துருவல் போல் துருவிக்கொள்ளவும். வெல்லத்தையும், ஏலக்காயையும் பொடிச் செய்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீரில் துருவிய மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும். மாங்காய் வெந்ததும் பொடி செய்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். மாங்காயில் வெல்லம் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாங்காயும், வெல்லமும் ஒன்றாக கலந்த பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வரை வைத்திருந்து இறக்கவும். சுவையான மாங்காய் பச்சடி தயார்.

Tags :
|