Advertisement

த்ரிஷா திருமணம் பற்றி விளக்கம்

By: vaithegi Sat, 23 Sept 2023 10:34:32 AM

த்ரிஷா திருமணம் பற்றி விளக்கம்


தமிழில் மிகவும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. இதனை அடுத்து அவர் தயாரிப்பாளருடன் திருமணம் என்ற தகவல் ஒன்று பரவியது . எனவே அதற்கு நடிகை த்ரிஷா விளக்கம் ஒன்று கொடுத்து உள்ளார்

நடிகை த்ரிஷா, விஜய்யின் ‘லியோ’படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘தி ரோட்’ படம் அக்.6-ம்தேதி வெளியாகிறது.

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார்.

married,trisha ,திருமணம் ,த்ரிஷா

இந்த நிலையில், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷாதிருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து இதற்குப்பதிலளித்துள்ள த்ரிஷா, ‘வதந்திகளைப் பரப்பாமல் அமைதியாக இருங்கள்’ என்று லியோ போஸ்டர் வசனத்தைக் குறிப்பிட்டு இவைவெறும் வதந்திதான் என்று பதிலளித்து உள்ளார்

Tags :