Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் வெளியீடு

தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் வெளியீடு

By: vaithegi Tue, 24 Oct 2023 5:22:55 PM

தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் வெளியீடு

லியோ பட வெற்றியை நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க, படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து கொண்டு வருகிறது. இதையடுத்து முதல் அப்டேட்டாக ஏற்கனவே நடந்து முடிந்த பூஜை விழாவுக்கான வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பூஜை வீடியோவுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மெனக்கெட்டு இருக்கிறார் போல் தெரிகிறது. தனது பாணியில் பின்னணி இசை அமைத்து அசத்தியுள்ளார், வீடியோவில் இடம்பெற்றுள்ள பிஜிஎம் கேட்பதற்கு அந்த அளவுக்கு அருமையாக இருக்கிறது. அத்துடன், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்டும் தெரிந்துவிட்டது.

crew,actors,commander 68 ,படக்குழுவினர் ,நடிகர்கள் ,தளபதி 68


இதனை அடுத்து அந்த வீடியோவில், நடிகர்கள் பிரசாந்த், சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இவர்களை தவிர, வெங்கட் பிரபு படத்தில் வழக்கமாக நடிக்கும் நடிகர்களான வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று உறுதியாகியுள்ளது.

தமிழில் கடைசியாக விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரிக்கு இப்படம் பெரிய வெளியிடாக அமையும். 12 வருடங்கள் கழித்து விஜய்யிடன் மீண்டும் லைலா நடிக்க, மேலும் இது விஜய் சினேகா இணையும் 2-வது படத்தை குறிக்கிறது. மேலும் அது மட்டும் இல்லாமல், விஜய் நடித்திருக்கும் போக்கிரி, வில்லு படங்களுக்கு பிறகு, தளபதி 68 படத்தில் நடிக்கிறார் நடிகர் பிரபுதேவா.

Tags :
|
|