Advertisement

நவம்பர் 9-ம் தேதி முதல் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு துவங்குகிறது!

By: Monisha Thu, 05 Nov 2020 11:10:31 AM

நவம்பர் 9-ம் தேதி முதல் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு துவங்குகிறது!

நவம்பர் 9-ம் தேதி முதல் விஷால் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துப்பறிவாளன் 2'. படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் மிஷ்கின் - விஷால் இருவருக்கும் மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகினார். அதனால் விஷால் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிட்டார்கள்.

vishal film factory,detective 2,shooting,vishal ,விஷால் பிலிம் பேக்டரி,துப்பறிவாளன் 2,படப்பிடிப்பு,விஷால்

தற்போது 'சக்ரா' படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை விஷால் முடிக்கவுள்ளார். இதனால் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

நவம்பர் 9-ம் தேதி முதல் விஷால் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான காட்சிகளும் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதில் அஷ்யா, ரகுமான், கவுதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.

Tags :