Advertisement

விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிட்டனராம் தனுஷ்- ஐஸ்வர்யா

By: Nagaraj Wed, 05 Oct 2022 9:51:54 PM

விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிட்டனராம் தனுஷ்- ஐஸ்வர்யா

சென்னை: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிந்து செல்வதாக அறிவித்தனர்.

aishwarya,dhanush,married,petition,tamil film ,ஐஸ்வர்யா, தமிழ் திரையுலகம், ரஜினிகாந்த், ஹாலிவுட்

இதையடுத்து, தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினிகாந்த் வீட்டில் இரு குடும்பத்தினரும் நடத்திய சந்திப்பில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீபாவளி தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Tags :