Advertisement

தியேட்டருக்கு வந்து ஜெயிலர் படம் பார்த்த தனுஷ், அனிருத்

By: Nagaraj Thu, 10 Aug 2023 3:30:17 PM

தியேட்டருக்கு வந்து ஜெயிலர் படம் பார்த்த தனுஷ், அனிருத்

சென்னை: ரஜினியின் ஜெயிலர் படத்தை தனுஷ், அனிருத் இருவரும் தியேட்டரில் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும். காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது.

anirudh,video,going viral,jailer movie,dhanush ,அனிருத், வீடியோ, வைரலாகி வருகிறது, ஜெயிலர் படம், தனுஷ்

முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக இருப்பதாக விமர்சனம் கொடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் படத்தை கொண்டாடி வர நடிகர் ரஜினியோ இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரபலங்கள் தனுஷ் மற்றும் அனிருத் ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அனிருத் ரோஹினி திரையரங்கில் ரசிகர்கள் முன்பு பாட அதனை அவர்களும் கொண்டாடி உள்ளனர். தற்போது அனிருத் பாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags :
|