Advertisement

ஒரே படத்தில் இணையும் தனுஷ் மற்றும் சிம்பு

By: vaithegi Thu, 23 Nov 2023 11:35:21 AM

ஒரே படத்தில் இணையும் தனுஷ் மற்றும் சிம்பு

தமிழ் சினிமாவில் ரஜினி -கமல், விஜய் -அஜித், என்று இவர்களுடைய படங்களுக்கு இடையே போட்டி நிலவுவது போல அந்த வரிசையில் தனுஷ் சிம்புவிற்கு தான் போட்டிகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதையடுத்து அஜித் -விஜய் இவர்கள் இருவரும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்கவேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவது போல, சிம்பு மற்றும் தனுஷும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் எனஆசைப்பட்டு வருகிறார்கள்.

அவர்களுக்காகவே ஒரு சூப்பரான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்களாம். அது வேறு எந்த திரைப்படமும் இல்லை இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்கை வரலாற்று படம் தான். இந்த படம் உருவாக உள்ளதாகவும், படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் முன்னதாகவே தகவல்கள் பரவியது.

dhanush,simbu. pict ,தனுஷ் ,சிம்பு.படம்

அதுவும், இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கதாபாத்திரத்தில் நடிக்க தான் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.மேலும் அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இத்தகவல் எல்லாம் உண்மை என்றால் கண்டிப்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இடையில், சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதைப்போன்று, தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ள நிலையில், இதற்கு அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்தும் வருகிறார்.

Tags :