Advertisement

ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் தீபாவளி விருந்து!

By: Monisha Mon, 09 Nov 2020 2:20:54 PM

ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் தீபாவளி விருந்து!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தங்களது சமூக வலைதளங்களில் 'ஜகமே தந்திரம்' படத்தில் இடம்பெற்ற 'புஜ்ஜி' என்ற வீடியோ பாடல் வரும் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

fans,dhanush,diwali,theaters,bhujji song ,ரசிகர்கள்,தனுஷ்,தீபாவளி,திரையரங்குகள்,புஜ்ஜி பாடல்

வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நேரத்தில் தனுஷ் தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் தீபாவளி விருந்தாக இந்த பாடல் கருதப்படுகிறது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சௌந்தரராஜா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Tags :
|
|