Advertisement

தனுஷ் மீண்டும் சன்பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார்

By: vaithegi Wed, 18 Jan 2023 8:26:48 PM

தனுஷ் மீண்டும் சன்பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார்

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இந்த படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இந்த படத்திற்கு தெலுங்கில் 'சார்' எனவும் , தமிழில் 'வாத்தி' எனவும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

sunpictures,dhanush ,சன்பிக்சர்ஸ் ,தனுஷ்

எனவே அதன்படி, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் விரைவில் அப்டேட்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தனுஷ் மீண்டும் சன்பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார் .

Tags :