Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

By: vaithegi Tue, 21 Feb 2023 1:27:45 PM

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

‘கேப்டன் மில்லர்’ படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிடல் .... நடிகர் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தனைத் தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறது.

சாணி காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு வருகின்றனர்.

release,dhanush,captain miller ,ரிலீஸ் ,தனுஷ் ,கேப்டன் மில்லர்


இதனை அடுத்து இதன் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி 'கேப்டன் மில்லர்' படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :