- வீடு›
- பொழுதுபோக்கு›
- தனுஷ் நடித்த படம் ஓடிடியில் வெளியாகிறதா?
தனுஷ் நடித்த படம் ஓடிடியில் வெளியாகிறதா?
By: Monisha Wed, 01 July 2020 10:27:41 AM
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்றும், ஓடிடியில் ரிலீஸாகவும் வாய்ப்பு இருப்பதாகவும் இருவேறு தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் சமிபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரைவில் ‘ஜகமே தந்திரம்’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் ’ஜகம்’ குணமானதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஆச்சரிய அறிவிப்பு ஒன்று இன்று காலை வெளியாகவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை மாதம் தனுஷின் பிறந்த நாள் மாதம் என்பதால் தனுஷின் பிறந்த நாளாக ஜூலை 28ல் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது.