Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வடசென்னை-2 படம் வெப் தொடராக எடுக்க ஆலோசனை; இயக்குனர் வெற்றிமாறன் தகவல்

வடசென்னை-2 படம் வெப் தொடராக எடுக்க ஆலோசனை; இயக்குனர் வெற்றிமாறன் தகவல்

By: Nagaraj Sat, 09 May 2020 4:12:10 PM

வடசென்னை-2 படம் வெப் தொடராக எடுக்க ஆலோசனை; இயக்குனர் வெற்றிமாறன் தகவல்

வடசென்னை -2 படத்தை வெப் தொடராக எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வட சென்னை 2 படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

web series,vadasen-2,dhanush,director,vijayamaran ,வெப் தொடர், வடசென்னை-2, தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன்

இதன் 2 ஆம் பாகம் இன்னும் தயாராகவில்லை. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் அசுரன் படம் வெளியாகி சாதனை படைத்தது. வடசென்னை 2-ம் பாகத்தை 2 சீசன்களை கொண்ட வெப் தொடராக எடுக்கலாமா? என்று ஆலோசிப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். இது வெப் தொடராக உருவானால் அதில் தனுசே நடிப்பார் என்று கூறப்படுகிறது.

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் பிரபல நடிகர்-நடிகைகள் பலர் அதில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :