Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு அபாரம்; இந்தி பட இயக்குனர் பாராட்டு

அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு அபாரம்; இந்தி பட இயக்குனர் பாராட்டு

By: Nagaraj Sun, 31 May 2020 10:32:18 AM

அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு அபாரம்; இந்தி பட இயக்குனர் பாராட்டு

அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு அபாரம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் கரண் ஜோஹர்.

இதுகுறித்து இவர் தெரிவித்துள்ளதாவது:

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை பார்த்தேன். கடவுளே, என்ன ஒரு அற்புதமான படம். தனுஷின் நடிப்பு அபாரம். படத்தின் விறுவிறுப்பான காட்சிகளால் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன்.

karan johar,asura,dhanush,director atlee,appreciation ,கரண் ஜோஹர், அசுரன், தனுஷ், இயக்குனர் அட்லீ, பாராட்டு

இதேபோல், அட்லீ இயக்கிய பிகில் படத்தையும் பார்த்தேன். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம். அட்லியின் அனைத்து படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். மசாலா படங்களை எடுப்பதில் இவர் ஒரு மாயாவி. இவ்வாறு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதையடுத்து இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கரண் ஜோஹருக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பாலிவுட் இயக்குனர்கள் தமிழ் படங்களின் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களை பார்த்து மனம் திறந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|