Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தமிழக மக்கள் மீது கொண்ட அன்புதான் தமிழில் தோனி படம் தயாரிக்க முடிவாம்

தமிழக மக்கள் மீது கொண்ட அன்புதான் தமிழில் தோனி படம் தயாரிக்க முடிவாம்

By: Nagaraj Mon, 24 July 2023 8:40:24 PM

தமிழக மக்கள் மீது கொண்ட அன்புதான் தமிழில் தோனி படம் தயாரிக்க முடிவாம்

சென்னை: “தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பால்தான், தமிழில் படம் பண்ண ‘தல’ தோனி முடிவு செய்தார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் லெட்ஸ் கெட் மேரேட் (எல்ஜிஎம்) என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

reason,tamil,dhoni,movie,first ,காரணம், தமிழ், தோனி, படம், முதல்

காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே நட்சத்திரம் இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

‘எல்ஜிஎம்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. ‘எல்ஜிஎம்’ படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் விளம்பரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர், “தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பால்தான், தமிழில் படம் பண்ண ‘தல’ தோனி முடிவு செய்தார்” என்று தெரிவித்தனர்.

Tags :
|
|
|
|