Advertisement

துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

By: Monisha Wed, 10 June 2020 1:08:36 PM

துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தாக அஜய் ஞானமுத்து இயக்கிவரும் ’கோப்ரா’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இரு படங்களின் அடுத்த கட்ட படப்பிடிப்பும் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் நீண்ட நாள் தாமதம் ஆகி இருந்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.

actor vikram,director gautam menon,dubbing,shooting ,நடிகர் விக்ரம்,இயக்குனர் கௌதம் மேனன்,டப்பிங்,படப்பிடிப்பு

’துருவ நட்சத்திரம்’ படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விக்ரம் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்திற்காக டப்பிங் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதால் ஊரடங்கு முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பை முடித்து விட்டு விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார் திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Tags :