Advertisement

யோகி பாபுவிற்கு தீண்டாமை நிகழ்ந்ததா? இணையத்தில் வைரலாகும் வீடியோ

By: Nagaraj Mon, 07 Aug 2023 8:23:10 PM

யோகி பாபுவிற்கு தீண்டாமை நிகழ்ந்ததா? இணையத்தில் வைரலாகும் வீடியோ

சென்னை: கோயிலுக்கு சென்ற யோகி பாபுவிற்கு தீண்டாமை நிகழ்ந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகவும், மிகவும் பிஸியான நடிகராகவும் மாறியிருப்பவர் யோகிபாபு. ஒரு படத்தின் ஹீரோவுடைய கால்ஷீட்டை எளிதாக பெற்று விடலாம். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.
ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இடம்பெறுகிறார். வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, வசனங்கள் பேசும் முன்பாகவே பாடி லேங்குவேஜால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை யோகிபாபுவுக்கு உள்ளது.

yogi babu,untouchability,video,social media,comments,temple ,யோகி பாபு, தீண்டாமை, வீடியோ, சமூக வலைதளம், கருத்துக்கள், கோயில்

சமீபத்தில் தோனியின் தயாரிப்பில் வெளியான எல்ஜிஎம் படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். யோகி பாபுவின் காமெடி தான் படத்தையே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் கோவிலுக்கு சென்ற யோகி பாபுவிற்கு தீண்டாமை நிகழ்ந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. கோவில் உள்ளே நின்று கொண்டிருந்த அர்ச்சகருக்கு யோகி பாபு அருகில் சென்று கை கொடுக்க கையை நீட்டுகிறார்.

ஆனால் அவர் கை கொடுப்பதற்கு மறுத்துவிட்டு பேச ஆரம்பித்து விட்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பலர் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|