- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய் அப்படி சொன்னாரா? இயக்குனர் பேரரசு கேள்வி
விஜய் அப்படி சொன்னாரா? இயக்குனர் பேரரசு கேள்வி
By: Nagaraj Fri, 04 Aug 2023 11:38:32 PM
சென்னை: 'நான் தான் சூப்பர்ஸ்டார் என விஜய் எப்போதாவது கூறினாரா. சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டம், அது தான் நம்பர் 1 என இல்லை. என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் பற்றிய பேச்சுகள் கடந்த பல வருடமாகவே இருந்துவருகிறது. விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என நடிகர் சரத்குமார் வாரிசு பட நிகழ்ச்சியில் பேச, அதற்கு பிறகு தொடங்கியது இந்த சர்ச்சை.
சமீபத்தில் நடந்த ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது காக்கா கழுகு கதை ஒன்றை கூறி இருந்தார். அவர் காக்காவால் பருந்து அளவுக்கு பறக்க முடியாது என அவர் கூறியது விஜய் பற்றி தான் என பேச்சு எழுந்து இருக்கிறது
இந்நிலையில் தற்போது இயக்குனர் பேரரசு இந்த சர்ச்சை பற்றி பேசி இருக்கிறார். 'நான் தான் சூப்பர்ஸ்டார் என விஜய் எப்போதாவது கூறினாரா. சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டம், அது தான் நம்பர் 1 என இல்லை."
"இந்த பிரச்சனையால் இரண்டு பேருக்குமே மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கும். அவர்கள் சும்மா தான் இருக்காங்க, மற்றவர்கள் தான் கொம்பு சீவி விட்டு பிரச்சனையை பெரிசு ஆக்குறாங்க" என பேரரசு கேட்டிருக்கிறார்.