Advertisement

பாலிவுட் படத்தின் ரீமேக்கில் சூர்யா

By: vaithegi Thu, 16 Nov 2023 1:02:08 PM

பாலிவுட் படத்தின் ரீமேக்கில் சூர்யா

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து பெரும் பாராட்டுக்களை குவித்தார். இதனை அடுத்து இத்திரைப்படம் பல விருதுகளை குவித்தது. இந்நிலையில், கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தை போன்ற மற்றொரு உண்மை சம்பவ கதையில் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் ’12th FAIL’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

suriya,remake ,சூர்யா,ரீமேக்


இந்த நிலையில், இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சூர்யாவின் 2D நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாலிவுட் திரைப்பட ரீமேக்கில் தான் சூர்யா நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சூர்யா நடிக்கிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஒரு வேலை நடித்தால் அது சிறப்பு தோற்றமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதன் இடையில், நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் விறு விறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து கொண்டு வருகிறார்

Tags :
|