Advertisement

பகாசூரன் படக்குழுவினருக்கு இயக்குனர் அனுராக் பாராட்டு

By: Nagaraj Mon, 20 Feb 2023 9:46:07 PM

பகாசூரன் படக்குழுவினருக்கு இயக்குனர் அனுராக் பாராட்டு

சென்னை: படக்குழுவினருக்கு வாழ்த்து... 'பகாசூரன்' படக்குழுவினருக்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது.

greetings,bhagasuran,director,appreciation,crew ,வாழ்த்துக்கள், பகாசூரன், இயக்குனர், பாராட்டு, படக்குழு

இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

'பகாசூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "பகாசூரன் திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது. என்னுடைய நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

Tags :