Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஷாரூக் – விஜய் கூட்டணியில் ஒரு படம் இயக்க மும்முரம் காட்டும் இயக்குனர் அட்லீ

ஷாரூக் – விஜய் கூட்டணியில் ஒரு படம் இயக்க மும்முரம் காட்டும் இயக்குனர் அட்லீ

By: Nagaraj Mon, 13 Nov 2023 8:58:17 PM

ஷாரூக் – விஜய் கூட்டணியில் ஒரு படம் இயக்க மும்முரம் காட்டும் இயக்குனர் அட்லீ

சென்னை: ஷாரூக் – விஜய்யை வைத்து இயக்க ஒரு படத்தை தயார்படுத்தி வருகிறாராம் இயக்குனர் அட்லீ.

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான். உலகம் முழுவதும் ரூ.1,140 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

good story,vijay,shah rukh khan,director,atlee,two heroes ,நல்ல கதை, விஜய், ஷாரூக்கான், இயக்குனர், அட்லீ, இரண்டு நாயகர்கள்

இந்நிலையில், இயக்குநர் அட்லி இணைய நேர்காணல் ஒன்றில், “என் பிறந்த்நாள் விழாவில் ஷாருக்கான் சார், விஜய் சார் சந்தித்தார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் எனத் தெரியாது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு ஷாருக்கான் சார் என்னை அழைத்து ‘நீ இரண்டு நாயகர்கள் வைத்து படம் எடுப்பதாக இருந்தால் சொல் நாங்கள் நடிக்க தயாராக இருக்கிறோம்’ எனக் கூறினார்.

விஜய் சாரும் ‘ஆமாபா நாங்க ரெடி’ எனக் கூறினார். நான் உண்மையாகவே இந்தப் படத்துக்காக உழைத்து வருகிறேன். ஆனால் இன்னும் இந்தப்படம் உறுதியாகவில்லை. அதற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன. நல்ல கதை அமைந்தால் இது நடக்கும் எனக் கூறியுள்ளார்.

Tags :
|
|