Advertisement

இயக்குனர் பாக்யராஜ் நடிகர் சங்கத்திலிருந்து 6 மாதத்திற்கு நீக்கம்

By: Nagaraj Sun, 02 Oct 2022 12:35:01 PM

இயக்குனர் பாக்யராஜ் நடிகர் சங்கத்திலிருந்து 6 மாதத்திற்கு நீக்கம்

சென்னை: நடிகர் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றியடைந்தது. நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கம் சார்பில் நடிகர் கே.பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


அதில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் பற்றி பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடிகர் சங்கத்துடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள். சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர்.

bhagyaraj,elimination,actors association,action,action ,பாக்யராஜ், நீக்கம், நடிகர் சங்கம், அதிரடி, நடவடிக்கை

இது குறித்து செயற்குழுவில் முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 25 நாட்களில் கே.பாக்யராஜ் விளக்கம் அளிக்க வேண்டும் என சங்கம் சார்பாக ஆகஸ்ட் 22ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

இதேபோன்று நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவிற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் தற்போது பாக்யராஜ், உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|